வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (23:42 IST)

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால்...வாழ்நாள் முழுவதும் இலவச சினிமா

ஒலிம்பிக்கில் வெற்றிபெறும் இந்திய வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும்  ஆயுள் முழுக்க இலவசமாக சினிமா படம் பார்க்கலாம் என ஐநாக்ஸ் சினிமா தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

ஜப்பால் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு என்பவர் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் டாமினோஸ் நிறுவனம் வாழ்நாள் முழுக்க அவருக்கு பீட்சா இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெற்றிபெறும் இந்திய வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும்  ஆயுள் முழுக்க இலவசமாக சினிமா படம் பார்க்கலாம் என ஐநாக்ஸ் சினிமா தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

வெற்றி பெரும் வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு அட்டை வழங்கபடும் எனதெரிவித்துள்ளது.