திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (23:29 IST)

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !

தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொரொனா சமயத்தில் பதவியேற்ற குறுகிய காலத்தில் சிறப்புடன் செயல்பட்டதாக சமீபத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தது.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள் 12 ஐபிஎஸ் அதிகாரிகலை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலை கடத்தல் பிரிவு ஐஜியாக தினகரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் ரேசன் கடைகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.