1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. ICMR notification about vaccination

67% பேருக்கு எதிர்ப்பு சக்தி; 40 கோடி பேரை கொரோனா தாக்கும்! – ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

ICMR
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தமாக 3 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் சமீப காலத்தில் தடுப்பூசி நடவடிக்கைகளால் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இதனால் நாடளவில் 67% பேருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்றும், எனினும் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு 40 கோடி பேருக்கு பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
5 ஆயிரம் தலீபான்களை விடுதலை செய்தது தவறு! – ஆப்கானிஸ்தான் அதிபர் வேதனை!