1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (13:04 IST)

5 ஆயிரம் தலீபான்களை விடுதலை செய்தது தவறு! – ஆப்கானிஸ்தான் அதிபர் வேதனை!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலீபான்களை விடுதலை செய்தது தவறு என அந்நாட்டு அதிபர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக தலீபான்களுக்கு எதிராக ஆப்கன் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த அமெரிக்கா தனது படைகளை முழுவதுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெற்றுள்ளது. இதனால் தலீபான்கள் அரசு ஆதிக்கத்திலிருந்த பகுதிகளை தாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பக்ரீத் விழாவுக்காக மக்களிடம் பேசிய அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி “தலீபான்கள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை நம்பி 5 ஆயிடம் தலீபான்களை விடுதலை செய்தது தவறாகிவிட்டது. அதனால்தான் இந்த அளவில் இடங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். இன்றுவரை அவர்கள் அர்த்தமுள்ள எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை” என தெரிவித்துள்ளார்.