திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (08:59 IST)

ரூ.36 ஆயிரம் செலவில் திருமணம்: அசத்திய ஐஏஎஸ் அதிகாரி

திருமணம் என்றாலே லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் ஆடம்பரமாக செலவு செய்து வரும் நிலையில் வெறும் ரூ.36 ஆயிரம் செலவில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகனின் திருமணத்தை நடத்தியுள்ளார். இந்த செலவையும் மணமகன், மணமகள் வீட்டார் சரிசமமாக பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆந்திரவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பட்னாலா பசந்த் குமார் என்பவரது மகன் திருமணம் பிப்ரவரி 10ம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தை வெகு எளிமையாக அதாவது மிக முக்கிய செலவுகளை மட்டுமே செய்து ரூ.36 ஆயிரத்திற்குள் நடத்தி முடித்துவிட்டார் பட்னாலா

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட தெலங்கானா மற்றும் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் மணமக்களை வாழ்த்தியதோடு, இதுபோன்ற எளிய திருமண்த்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆடம்பர திருமணத்திற்காக கடன்வாங்கி திருமணத்திற்கு பின் கடன்சுமையால் புதுமண தம்பதிகள் தவிப்பதை தவிர்க்க இதுபோன்ற எளிய திருமணங்களை அனைவரும் நடத்த வேண்டும் என்றும், ஆடம்பர திருமணத்திற்கு செய்யும் செலவை அனாதை மற்றும் ஆதரவற்ற இல்லங்களுக்கு செலவு செய்தால் அவர்களுடைய மனப்பூர்வமான ஆசி கிடைக்கும் என்றும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பலர் கருத்து தெரிவித்தனர்.