வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (14:12 IST)

கல்யாணத்த இவ்வளவு ச்சீப்பாவா நடத்துறது? இப்படி பண்ணிட்டீங்களே சார்!!!

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகனின் திருமணத்தை வெறும் 36 ஆயிரத்தில் நடத்தி முடித்துள்ளார்.
 
பொதுவாகவே கல்யாணம் என்றால் லட்சக்கணக்கில் செலவாகும், பிரபலங்களின் திருமணம் என்றால் கோடிகளில் தான். பத்திரிக்கை, துணி, நகை, மண்டபம் சாப்பாடு, டெகரேஷன் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
அப்படியிருக்க விசாகப்பட்டினம் மெட்ரோபாலிட்டன் மேம்பாட்டு ஆணையரான பசந்த் குமார், தனது மகனின் திருமணத்தை வெறும் 36 ஆயிரம் ரூபாயில் நடத்தி முடித்துள்ளார். திருமணப் பத்திரிக்கை முதல் சாப்பாடு துணி மணி வரை அனைத்துமே சிம்பிள் தான். செலவான 36 ஆயிரம் ரூபாயில் 18 ஆயிரம் மாப்பிள்ளை வீட்டாரும் 18 ஆயிரம் பெண் வீட்டாரும் ஷேர் செய்து கொண்டனராம். 


இந்த அதிகாரியை பார்த்தாவது வெறும் பெயருக்காகவும், வெட்டி பந்தாவிற்காகவும் கல்யாணத்திற்காக கடன் வாங்கி லட்சக்கணக்கில் செலவு செய்வோர்கள் திருந்துவார்களா என பார்ப்போம்.