1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Venkaiah Naidu rejects Deepak mishra's Disqualification Petition

தலைமை நீதிபதியை பதவிநீக்கம் செய்ய முடியாது - வெங்கையா நாயுடு திட்டவட்டம்

தீபக் மிஸ்ரா
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய முடியாது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 மூத்த நீதிபதிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார் என குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
 
தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 7 எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு துணைத்தலைவர் வெங்கயா நாயுடுவை சந்தித்து மனு அளித்தனர். 
இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கயா நாயுடு, தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்கட்சிகள் அளித்த மனுவை சட்ட வள்ளுனர்களின் ஆலோசனைப்படி அதிரடியாக நிராகரித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மெக்காவுக்கு புனித யாத்திரை சென்ற பேருந்து விபத்து- 4 பேர் பலி