வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 ஏப்ரல் 2018 (13:12 IST)

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?

சமீபத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உள்பட ஒருசில முக்கிய துறைகளின் இணையதளங்கள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரபூர்வ இணையதளமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இது ஹேக்கர்களின் கைவரிசையா அல்லது டெக்னிக்கல் பிரச்சனையா என்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து சட்டத்துறையும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை
 
ஆனால் இதுகுறித்த விவாதங்கள் டுவிட்டரில் தொடங்கிவிட்டது. தொடர்ந்து மத்திய அரசுக்கு இதுகுறித்து டுவிட்டர் பயனாளிகள் கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்தியாவின் இணையதளங்களையே மோடி அரசு பாதுகாக்கவில்லை என்றால் பெண்களையும் குழந்தைகளையும் எப்படி பாதுகாக்கும் என்று ஒரு டுவிட்டர் பயனாளி கேள்வி எழுப்பியுள்ளார்.