ஞாயிறு, 23 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 மார்ச் 2025 (08:33 IST)

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

Train
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தாம்பரம் - கன்னியாகுமரி, திருச்சி - தாம்பரம் இடையே இயக்கப்படும் இந்த ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037), மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். 
 
மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 31-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06038), மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
 
திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06048), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். 
 
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29,30,31 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06047), அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.
 
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
 
Edited by Siva