1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஜனவரி 2020 (09:10 IST)

மீண்டும் வெற்றி பெற்றால் டோக்கியோ, லண்டன் சாலை போல் மாற்றுவேன்: முதல்வர் வாக்குறுதி

சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் ஆனால் சாலைகளை லண்டன் மற்றும் டோக்கியோ சாலை போல் மாற்றுவேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார் 
 
டெல்லியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். சமீபத்தில் பெண்களுக்கு அனைத்து போக்குவரத்துகளிலும் இலவச பயணம் என அறிவித்த அறிவித்து பெண்களின் வாக்குகளை மொத்தமாக தன் பக்கம் இழுத்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது மேலும் ஒரு வாக்குறுதியை கூறியுள்ளார் 
 
டெல்லியை முற்றிலும் வெளிநாடு போல் அழகுபடுத்த தான் திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லியில் உள்ள 40 சாலைகளையும் டோக்கியோ மற்றும் லண்டன் சாலைகள் போல் அதி நவீனமாக மாற்ற தான் நிபுணர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் மீண்டும் வெற்றி பெற்று முதல்வரானால் டோக்கியோ மற்றும் லண்டன் சாலைகளை போல் டெல்லி சாலைகளையும் மாற்றுவேன் என்றும் அவர் உறுதிமொழி கொடுத்துள்ளார் 
 
மேலும் யமுனா ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்தடுத்த அதிரடி வாக்குறுதி காரணமாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது