1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (21:50 IST)

பாபநாசம் படம் பார்த்து கொலை செய்த கேரள வாலிபர்: சிக்கியது எப்படி தெரியுமா?

கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ’பாபநாசம்’ படத்தை பார்த்து கொலை செய்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் சிக்கிக் கொண்ட பரபரப்பான சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
கேரளாவைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கு வித்யா என்ற மனைவி இருந்தார். இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை சச்சரவுகள் இருந்து வந்ததாகவும் இருப்பினும் வேறுவழியின்றி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரேம்குமாருக்கு சுனிதா என்ற கள்ளக்காதலி இருப்பது வித்யாவுக்கு தெரியவந்தது 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பிரேம்குமாரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த நிலையில் பிரேம்குமாரின் வீட்டிற்கு ஒரு நாள் வந்த சுனிதா இருவரும் சேர்ந்து வித்யாவை கொலை செய்தனர். அதன் பின்னர் பிணத்தை எடுத்து கொண்டு ஆளரவம் இல்லாத ஒரு பகுதியில் வீசி விட்டு வித்யாவின் மொபைல் போனை பீகார் செல்லும் ரயில் ஒன்றில் மறைத்து வைத்து விட்டனர். பின்னர் தனது மனைவியை காணவில்லை என பிரேம்குமார் போலீசில் புகார் அளிக்க வித்யாவின் மொபைல் போனை ட்ரேஸ் செய்த போலீசார் அந்த மொபைல் போன் பிகாரில் இருப்பதை கண்டுபிடித்தனர் 
 
பின்னர் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பிரேம்குமாரும் சுனிதாவும் சேர்ந்தே வித்யாவை கொலை செய்தனர் என்றும் போலீசாரின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக வித்யாவின் போனை பீகார் ரயிலில் வீசியெறிந்துள்ளதையும் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர்.
 
பின்னர் இதுகுறித்து பிரேம்குமார் வாக்குமூலம் அளிக்கும் போது பாபநாசம் படம் பார்த்து அந்த படத்தில் கமல்ஹாசன் போனை ஒரு வடமாநில லாரியில் தூக்கி எறிவதை போலவே தானும் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து தற்போது பிரேம்குமார் மற்றும் சுனிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
 
பிரேம்குமார், சுனிதா, கொலை, போன், பாபநாசம்,