ஃபாத்திமா தற்கொலை வழக்கு.. ஐஐடிக்கு வந்த கொலை மிரட்டல்

Arun Prasath| Last Modified சனி, 7 டிசம்பர் 2019 (10:31 IST)
ஃபாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஐஐடிக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா என்ற பெண்  கடந்த 8 ஆம் தேதி விடுதி  சென்னை ஐஐடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஃபாத்திமாவின் தற்கொலைக்கு 3 பேராசிரியர்கள் தான் காரணம் என புகார் எழுந்தது. இது குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி, சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு, ஃபாத்திமா கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் எனவும், இனியும் பொறுத்துகொள்ள முடியாது எனவும் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.

இது குறித்து கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் கடிதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :