திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (13:40 IST)

மாந்தோப்பில் அலறல் சத்தம்... கற்பழித்து எரிக்கப்பட்டாரா இளம்பெண்?

மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் மாந்தோப்பு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் எரிந்த் நிலையில் இருந்துள்ளது. இது குறித்து உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 
 
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அக்கம்பக்கதினரிடம் விசாரணை மேற்கொண்ட போது, 2 நாட்களுக்கு முன்னர் அந்த மாந்தோப்பில் இருந்து பெண்ணின் அலறம் சத்தம் கேட்டதாகவும் அங்கு சென்று பார்த்த போது யாரையும் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 
 
அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அந்த பெண்ணை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினாரா எனவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது.