வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (08:30 IST)

கொலை வழக்கில் உள்ளே போன காதலன் – சாட்சிகளைப் பழிவாங்க காதலி போட்ட குரூர திட்டம் !

தனது காதலன் கொலை வழக்கில் உள்ளே செல்ல காரணமாக மூன்று பேர் மீது பொய்யான கற்பழிப்பு புகார் கூறிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் காவல் நிலையத்தில் தனக்கு லிப்ட் தருவது போல காரில்  ஏற்றிச் சென்று 3 பேர் பாலியல் வன்புனர்வு செய்துவிட்டதாக போலிஸில் புகார் அளித்துள்ளார். அதையடுத்துப் போலிஸார் நடத்திய விசாரணையின் போது 3 பேரை அடையாளம் காட்டியுள்ளார்.

இதையடுத்து அவர்களைப் போலிஸ் கைது செய்தது. ஆனால் அவர்கள் மூவரும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என உறுதியாகக் கூறினர். அவர்கள்தான் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று நிரூபிப்பதற்கு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த போலீஸார் அந்த பெண்ணிடம் சம்பவம் நடந்த இடம், கார், கார் நம்பர் போன்ற விவரங்களைக் கேட்டபோது அதற்கு அந்த பெண் முன்னர் சொன்ன தகவல்களுக்கு மாறான விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் கூறுவது பொய் என அறிந்த போலிஸார் 3 பேரையும் விடுதலை செய்துள்ளனர். எதற்காக போலியாக புகார் கொடுத்தார் எனக் கேட்டபோது ‘ஒரு கொலைவழக்கில் சிறையில் உள்ள எனது காதலனுக்கு எதிராக இவர்கள் மூன்று பேரும் சாட்சி கூறினர். அவர்களைப் பழிவாங்கவே இந்த திட்டம் தீட்டினேன்’ எனக் கூறி போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

இதையடுத்து அந்தப்பெண்ணையும் இந்த திட்டத்தில் அவருக்கு உதவியாக இருந்த நண்பர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.