தொடர்புடைய செய்திகள்
- தட்டையான ஆடுகளம்… இந்திய பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்!
- 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
- முடிவுக்கு வராத வேளாண் சட்ட பிரச்சினை! – நாடு தழுவிய முழு அடைப்பு அறிவிப்பு!
- 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள்: இந்தியா வெற்றி பெற வாய்ப்பா?
- 22.15 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
போலி தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட சோதனையில் கோவிஷீல்டு பயன்படுத்தப்படும் நாடுகளில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கோவிஷீல்டு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் தடுப்பூசிகளின் மேல் உள்ள லேபிள் எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
