முடிவுக்கு வராத வேளாண் சட்ட பிரச்சினை! – நாடு தழுவிய முழு அடைப்பு அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழு அடைப்பு நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு முதலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திலும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவையும் எட்டாத சூழல் உள்ளது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்வரும் 27ம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக பாரதீய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது.