வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (19:25 IST)

கேஷ் தான் வேண்டும், கூகுள் பே பணம் வேண்டாம்: மருத்துவரின் கறாரால் பலியான உயிர்!

கூகுள் பே பணம் அனுப்ப வேண்டாம் கேஷ் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து பரிதாபமாக ஒரு உயிர் பலியான சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது 
 
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் முதலில் அட்வான்ஸ் பணத்தை கட்டுமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது 
 
கையில் ரொக்கம் இல்லாததால் கூகுளே பே மூலம் பணம் செலுத்துவதாக அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் கேஷ் தான் வேண்டும் கூகுள் பிளே மூலம் பணம் வேண்டாம் என்று கறாராக மருத்துவமனை நிர்வாகிக்ள் கூறி விட்டதை அடுத்து அந்த நோயாளியின் உறவினர்கள் ஏடிஎம் நோக்கி தேடி அலைந்தனர்
 
கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து ஒரு வழியாக பணத்தை கொண்டு வந்த நிலையில் அந்தப் பெண் பரிதாபமாக இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் கெடுபிடியால் பரிதாபமாக உயிர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது