1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (18:49 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,000 பேரை காணவில்லை: அதிர்ச்சியில் சுகாதாரத்துறை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுமார் மூவாயிரம் பேரை காணவில்லை என்ற தகவல் பெங்களூரு சுகாதாரத் துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது 
 
நாட்டிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று பெங்களூரு என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் பெங்களூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3000 பேரை காணவில்லை என அம்மாநில அமைச்சர் அசோகா என்பவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மாயமான நோயாளிகளின் செல்போன் எண்கள் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் நோயாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
மாயமான கொரோனா நோயாளிகளால் ஏகப்பட்ட பேர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பெங்களூர் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது