ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (17:05 IST)

ஜிஎஸ்டிக்குள் வருமா பெட்ரோல்? விலை உயர்வுக்கு தீர்வு என்ன?

மத்திய அரசின் ஒப்புதல் படி தினசரி பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அன்றைய சந்தை நிலவரப்படி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 
 
கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
இன்று சென்னையில் பெட்ரோல் ரூ.76.59க்கும், டீசல் ரூ.68.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை அதிகப்பட்சமாக 2014ஆம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.76.93க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
மாநிலங்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் பெட்ரோலிய பொருட்கள், மதுபானம் ஆகியவை மீது நாடு முழுவதும் ஒரே வரிவித்திப்பு என கூறி வெளியாகிய ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரபடவில்லை. 
 
ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் வந்தால் அதன் விலை குறையும் என்பதால் இந்தன் விலை குறையும் என இதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. 
 
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்ம்ந்நெதிர பிரதான் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர கோரிக்கை வைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.  
 
ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்பாட்டால் இதன் விலை குறையும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதே இந்தியாவில் விலை குறைக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.