ஐபிஎல் - சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

ipl
Last Updated: வெள்ளி, 30 மார்ச் 2018 (10:53 IST)
ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விலையின் விவரம் வெளியாகி உள்ளது.
 
இந்திய கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத உள்ளன.
 
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் உள்ளுர் மைதானத்தில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாடும். இந்த போட்டிகளை மைதானத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
i
 
இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணத்தின் விவரம் சமீபத்தில் வெளியானது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300, அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை இணையதளம் வாயிலாகவும், கவுண்ட்டர் வாயிலாகவும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :