வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (15:29 IST)

கர்நாடகாவில் நாளை முதல் உயரும் மதுபானங்களின் விலை; அதிர்ச்சியில் குடிமகன்கள்

கர்நாடகாவில் குடிமகன்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக நாளை முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்க உள்ளது.
இந்தியாவின் கஜானாவை நிரப்ப முக்கிய பங்கை வகிக்கிறது இந்த மதுபான விற்பனை. அரசு டார்கெட் வைத்தெல்லாம் மது விற்பனை செய்வதுண்டு. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இலக்கைத் தாண்டிலும் மது விற்பனை ஜோராக நடைபெறும்.

கர்நாடகத்தில் தனியார் நடத்தி வரும் மதுபானக் கடைகளில் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்ததால் வாட் வரி 5.5 சதவீதம் நீக்கப்பட்டது. ஆனால் கலால் வரி 18 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. விலை குறைப்பால் மதுவிற்பனை ஜோரானது.
இந்நிலையில் கர்நாடகாவின் பட்ஜெட் தாக்கலில், மதுபானங்களுக்கு கூடுதலாக 8 சதவீத கலால் வரி விதிக்கப்பட்டதால் மதுபானங்களின் விலை அதிகரிக்க உள்ளது. பீர், விஸ்கி உள்ளிட்ட அனைத்து மதுபான விலைகளும் விலை அதிகரிக்க உள்ளது. இந்த விலை அதிகரிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.