ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (17:52 IST)

விஷால் படத்தை விலைகொடுத்து வாங்கிய நிறுவனம்

விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தின் தமிழக உரிமை விற்கப்பட்டுள்ளது. 
விஷால், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், வில்லனாக அர்ஜுன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த பொங்கலுக்கே இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி ஷூட்டிங் முடியாததால் ரிலீஸாகவில்லை. தற்போது எல்லாப்  பணிகளும் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.
 
இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கிரிக்கெஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் மரியதாசன் வாங்கியுள்ளார். வேலை நிறுத்தம் முடிந்தபிறகு படம் ரிலீஸாகும்.