1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Heading 1 Counterfeit notes seized in Gujarat state

குஜராத் மாநிலத்தில் ரூ.28.80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

FAKE MONEY
குஜராத்  மாநிலம் சூரத்தில் ரூ.28.80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கள்ள  நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இன்று  குஜராத் மா நிலம் சூரத் என்ற பகுதியில், ரூ.15 .80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆறு பெட்டிகளில்  இந்தக் கள்ள நோட்டுகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், துரிதமாகச் செயல்பட்ட போலீஸார் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து குற்றவாளிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும், இந்தக் கள்ள நோட்டியில், ரிசர்வ் பேங்க் என்பதற்குப் பதிலாக  ரிவர்ஸ் பேங்க் என்று அச்சடிக்கப்பட்டிருப்பதையும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
குஜராத் மாநிலத்தில் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த புதிய பாலம் ... மக்கள் அதிர்ச்சி