திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (09:33 IST)

கே எஸ் ரவிக்குமார் நடிக்கும் கூகுள் குட்டப்பா… ஜாலி “சூரத்தேங்கா” பாடல்!

கே எஸ் ரவிக்குமார் நடிப்பில் உருவாகி வரும் கூகுள் குட்டப்பா திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன.

இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே எஸ் ரவிக்குமார் வாங்கி அதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். அவரின் உதவியாளர்கள் சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி உள்ளனர். படத்துக்கு கூகுள் குட்டப்பா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதுபோல ஏற்கனவே மூன்று பாடல்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன.

இந்நிலையில் இப்போது சூரத்தேங்கா என்ற பாடல் வெளியாகியுள்ளது. கே எஸ் ரவிக்குமார் ரோபோவுடன் ஆட்டம் போடும் இந்த பாடல் இப்போது பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.