1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Harvard Announces 6 Free Online Courses In AI, Web Development, and Programming: Details Inside

இலவசமாக ஏஐ படிப்புகளை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. எப்படி விண்ண்ப்பம் செய்வது?

ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு , இணைய மேம்பாடு மற்றும் புரோகிராமிங் உள்ளிட்ட துறைகளில் 6 புதிய இலவச ஆன்லைன் படிப்புகளை அறிவித்துள்ளது. இந்த படிப்புகள் தொடக்க நிலை மாணவர்கள் முதல் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
குறிப்பாக, Data Science, Python மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் இணைய நிரலாக்கம், மற்றும் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளுதல் போன்ற தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
 
இதில் CS50 கணினி அறிவியல் மற்றும் வணிகத்திற்கான தொழில்நுட்ப பயன்பாடுகள் போன்ற புகழ்பெற்ற படிப்புகளும் அடங்கும். சுய விருப்பத்திற்கு ஏற்ப  படிக்கும் வசதி கொண்ட இந்த படிப்புகள் 3 முதல் 12 வாரங்கள் வரை நீடிக்கின்றன. 
 
தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் எவரும் இந்த படிப்புகளில் இணைந்து ஹார்வர்ட் தரத்திலான கல்வியை இலவசமாக பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் https://pll.harvard.edu/course/cs50s-introduction-programming-scratch என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இப்போதே விண்ணப்பிக்கலாம்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!