பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கடித்த நிலையில், இந்த வெற்றி கொண்டாட்டம் தற்போது சாம்பார் போராக மாறியுள்ளது.
பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்" என Zomato நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு கருத்து இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
இதை கண்டு கொதித்தெழுந்த சென்னை ரசிகர்கள், "பெங்களூரு சாம்பார் என்பது வெறும் சர்க்கரை தண்ணீர்" என்றும், "உண்மையான சாம்பார் சுவை உங்களுக்கு தெரியுமா?" என்றும் காரசாரமாக பதில் அளித்து வருகின்றனர். சிலர் ஒருபடி மேலே சென்று Zomato செயலியைத் தங்கள் மொபைலில் இருந்து நீக்கிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
அதே சமயம், பெங்களூரு ரசிகர்கள் தங்கள் ஊர் சாம்பாரே சிறந்தது என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய மோதல் இப்போது உணவு விடுதி வரை சென்றுள்ளது. எதுவாக இருந்தாலும், "பெங்களூரு தோசைக்கு சென்னை சாம்பார் தான் சிறந்த காம்போ" என நடுநிலையாளர்கள் சிலர் சமாதானம் பேசி வருகின்றனர்.
Edited by Siva