30 பேர் செய்யும் வேலையை AI செய்யும்!.. மனிதர்கள் வேலை இழக்கும் அபாயம்!..
சமீபகாலமாகவே மென்பொருள் (Software) துறையில் AI என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. AI என்பது 20 வருடங்களுக்கு முன்பே வந்து விட்டாலும் தற்போதுதான் அதிக துறையில் அது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. தற்போது கல்லூரி படிப்புகளில் AI தொடர்பான படிப்புகளும் வந்துவிட்டன..
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கூட AI தொடர்பான நிறைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் நாம் பார்க்கிறோம்.. இல்லாததை இருப்பது போல காட்டுகிறது AI . அதுமட்டுமல்ல, ஒருபக்கம் சாப்ட்வேர் துறையில் AI முக்கிய பங்காற்றி வருகிறது.. இதன் காரணமாக எதிர்காலத்தில் சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் பலரும் வேலை இழப்பார்கள் என ஏற்கனவே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது..
இந்நிலையில், AI தொடர்பாக கருத்து தெரிவித்த வேஃபவுண்ட் நிறுவ்ன CEO டாட்டியானா மமுட் AI தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் அடுத்த 5 ஆண்டுகளில் மென்பொருள் நிறுவனங்கள் காணாமல் போகும்... தங்களது நிறுவனத்தில் 30 பொறியாளர்கள் செய்ய வேண்டிய வேலையை Claude AI உதவியுடன் இரண்டு பேரால் செய்ய முடியும்.
கோடிங் பணிகளை AI வசம் ஒப்படைத்து விட்டு மனிதர்கள் வெறும் மேனேஜராக மட்டுமே செயல்படும் புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த மாற்றத்திற்கு தயாராகாத சாஃப்ட்வேர் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்கும் என அவர் கூறியிருக்கிறார்..