1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Mumbai Mayor turn as nurse

மும்பை பெண் மேயரின் நர்ஸ் அவதாரம்: பொதுமக்கள் ஆச்சரியம்

கிஷோரி பெட்நேக்கர்
மும்பை பெண் மேயரின் நர்ஸ் அவதாரம்
மும்பையை சேர்ந்த பெண் மேயர் திடீரென நர்ஸாக மாறியதால் அந்நகரத்தில் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது
 
மும்பை பெருநகர மேயராக இருந்து வருபவர் கிஷோரி பெட்நேக்கர். இவர் தற்போது வீட்டில் இருந்தே மாநகராட்சி பணியை பார்த்து வருகிறார். இவர் மேயராக ஆவதற்கு முன் நர்ஸாக பணிபுரிந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மும்பை உள்பட மகாராஷ்டிராவில் இந்தியாவிலேயே மிக அதிகமாக கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு வருவதை பார்த்த மேயர் கிஷோரி பெட்நேக்கர் தன்னுடைய நர்ஸ் சேவை தன்னுடைய மாநிலத்திற்கு தேவை என்பதை அறிந்து தற்போது அவர் நர்ஸாக களம் இறங்கி உள்ளார் 
 
மும்பை அரசு மருத்துவமனையில் அவர் தற்போது நர்ஸ் பணியில் ஈடுபட்டு வருவது குறித்த புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் மேயர் கிஷோரி பெட்நேக்கர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில் ‘தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் எனால் வீட்டில் இருக்க முடியாது. எனவேதான் உடனடியாக எனது முந்தைய தொழிலான நர்ஸ் தொழிலுக்கு மாறியுள்ளேன் என்று கூறியுள்ளார். மேயரின் இந்த முடிவால் மும்பை பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.