1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (08:27 IST)

இது கடவுள் வைத்த சோதனை, இதில் அனைவரும் பாஸாக வேண்டும்: வடிவேலு

இது கடவுள் வைத்த சோதனை,
கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரையுலக நட்சத்திரங்கள் பலர் அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் வைகைப்புயல் வடிவேலு இன்று மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது
 
கடவுள் தற்போது நமக்கெல்லாம் ஒரு சோதனை வைத்துள்ளார். அந்த சோதனையில் நாம் பாஸாக வேண்டும். எல்லோருக்கும் கடவுள் வைத்துள்ள இந்த சோதனையில் நாம் வெற்றி பெற வேண்டும். கடவுள் வைத்துள்ள இந்த பரிட்சை கொஞ்சம் கஷ்டமாகவும் வேதனையாகவும் தான் இருக்கும். ஆனால் அந்த சோதனையில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்றால் மனித குலத்திற்கே நல்லதாகும் 
 
வீட்டை விட்டு வெளியே செல்பவர்களை போலீஸ்காரர்கள் வேண்டுமென்றே அடிக்கவில்லை. எங்கே போகிறீர்கள் என்று போலீஸ் கேட்பார்கள். அதற்கு நாம் சரியான காரணத்தைக் கூறி விட்டால் நம்மை அவர்கள் அடிக்க மாட்டார்கள். இந்த விசாரணை எல்லாம் எதற்கு என்றால் நம்மை காப்பாற்றுவதற்கு தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
 
நாம் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக போலீஸ்காரர்கள் தெருவில் நின்று பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருசிலர் போலீஸ் அடியில் இருந்து தப்பிக்க முதுகில் தட்டை மறைத்து வைத்து வருகின்றனர். இதுபோன்ற காமெடிகள் எல்லாம் இனியும் செல்லாது தற்போது போலீசார் சுதாரிப்பாக இருக்கிறார்கள்’ 
 
இவ்வாறு நடிகர் வடிவேலு அந்த வீடியோவில் கூறியுள்ளார்