1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (12:45 IST)

திடீரென மாறிய ஹரியானா தேர்தல் முடிவு.. பாஜக ஆட்சியை பிடிக்கிறதா?

ஹரியானா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளிவரத் தொடங்கிய நிலையில், காலை 10 மணி வரை காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்திருந்தது. ஆனால், தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணி 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது என்றும், காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் கிடைத்தால் போதும், எனவே பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ள 49 தொகுதிகளில் வெற்றி பெற்றால், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஹரியானாவில் பாஜக ஆட்சி நடந்து வந்த நிலையில், இன்று காலையில் ஆட்சி மாறும் என்ற நிலைமையே இருந்தது, ஆனால் தற்போது திடீரென பாஜக முன்னிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்."

Edited by Mahendran