ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (16:50 IST)

காலையில் பாஜக.. மாலையில் காங்கிரஸ்! கட்சிக்கு கட்சி தாவும் பலே முன்னாள் எம்.பி!

ashok tanwar

ஹரியானா சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் பாஜகவில் இருந்த முன்னாள் எம்.பி ஒருவர் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

 

 

ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. ஹரியானாவில் பாஜக - காங்கிரஸ் மோதல் பலமாக உள்ளது.

 

இந்நிலையில் காலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முன்னாள் எம்.பி ஒருவர் மாலையில் காங்கிரஸில் இணைந்த சம்பவம் நடந்துள்ளது. ஹரியானாவில் முன்னாள் எம்.பியாக இருந்த அஷோக் தன்வார் இப்படி கட்சி மாறுவது இது முதல்முறை இல்லை என்கிறது ஹரியானா அரசியல் வட்டாரம்.

 

2019ல் காங்கிரஸில் இரிந்த அவர் அதிலிருந்து 2021ல் விலகி சென்று திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார். அடுத்த ஆண்டே திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சிக்கு தாவியவர் பின் அங்கிருந்து பாஜக சென்றுள்ளார். அங்கிருந்து தற்போது மீண்டும் காங்கிரஸுக்கே வந்து சேர்ந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு 4 கட்சிகளுக்கு தாவியுள்ளார் அஷோக் தன்வார்.

 

Edit by Prasanth.K