1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (09:54 IST)

ஹரியானா தேர்தல்.. இந்தியா கூட்டணி முன்னிலை.. காங்கிரஸ் உற்சாகம்..!

BJP Congress
ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தற்போது வாக்குகள் எண்ணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்னிலை விவரங்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக இந்தியா கூட்டணிக்கு அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தெரிகிறது. .

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு, கடந்த ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இந்த மாநிலத்தில் நேரடியாக மோதினர்.

அனைத்து கட்சிகளும் போட்டியிட்ட நிலையில், ஆட்சியைப் பிடிக்க 46 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில் கருத்துக்கணிப்புகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. தற்போது, முன்னிலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணி 55 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 24 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 8 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தெரிகிறது.

இந்த முன்னிலை தொடர்ந்து வந்தால், காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்பதால், காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், மேளதாளம் மற்றும் இனிப்புகளுடன் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran