செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (13:03 IST)

தமிழகத்தில் தற்போது மக்களாட்சி நடக்கவில்லை பேயாட்சி நடக்கிறது- பா.ஜ.க மாநில செயலாளர் அஸ்வத்தாமன்....

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பா.ஜ.க வின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க செயலாளர் நாஞ்சில் பாலு தலைமை வகித்தார் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநில செயலாளர் 
அஸ்வத்தாமன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.....
 
கடந்த மாதம் காரைக்காலை சேர்ந்த பா.ஜ.க விவசாய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் தன் குடும்பத்தினரோடு,
மருத்துவம் செய்வதற்காக ஆந்திரா சென்று விட்டு காரில் திரும்பும் போது புவனகிரி விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் முல்லை மாறன் என்பவர் புவனகிரியில்,குடிபோதையில் அவரது காரை உடைத்து பா.ஜ.க கொடியை கிழித்து அவரையும் தாக்கி உள்ளார்.
 
திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதை விட அவர்களுடைய தொண்டர்கள் குடிக்காமல் இருக்க கற்று கொடுக்க வேண்டும்,தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்வேண்டும்.
 
தி.மு.கவில் எவ்வளவோ மூத்தவர்கள்  உள்ள போது. நேற்று வரை சினிமா நடித்து கொண்டிருந்த உதயநிதியை துனை முதல்வர் ஆக்கியது.தற்போது தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி இல்லை பேயாட்சி.
 
நடிகர் விஜய் முதலில் தங்கள் கட்சியின் கொள்கையை சொல்லட்டும்,பின் அவரது கட்சியை பற்றி பேசலாம் என்றார்.