1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (10:42 IST)

குஜராத் & ராஜஸ்தானில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது!!

கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து குஜராத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து வரும் 26 ஆம் தேதியில் இருந்து 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக குஜராத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 50% இருக்கைகளுடன் பள்ளிகள் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குஜராத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசும் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.