புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (11:42 IST)

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு! – திடீர் அறிவிப்பு!

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக குறைந்துள்ள நிலையில் நீண்ட காலமாக திறக்கப்படாமல் உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் தொடங்க ஆயத்தமாகி வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதை ஒத்தி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.