1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Government takes on Rahul Gandhi over Facebook data breach

அமெரிக்கா தேர்தல் போல் இந்திய தேர்தலிலும் தலையிடுமா ஃபேஸ்புக்?

டிரம்ப்
அமெரிக்க தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்படும் வகையில் ஃபேஸ்புக்கில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட்டதாக வெளிவந்த தகவலை அடுத்து இன்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 7% விழ்ச்சி அடைந்தது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க்கின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடி குறைந்துவிட்டது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததே ஃபேஸ்புக் பங்குகள் வீழ்ச்சியடைய காரணமாக இருந்தது.

இந்த நிலையில் டிரம்ப் குறுக்கு வழியில் செயல்பட்டு பதவிக்கு வந்தது போன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கேம்பிர்ட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துடன் இணைந்து, வரும் 2019-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக பாஜக தனது சந்தேகத்தை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா போன்று  இந்தியத் தேர்தல் முறையில் தலையிட்டு மக்களின் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த ஃபேஸ்புக் முயற்சித்தால், அந்நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸை சமீபத்தில் சந்தித்துள்ளதால் பாஜக இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அடுத்த கட்டுரையில்
மூதாட்டியின் கைகளை கட்டி கடலில் போட முயற்சி செய்த மக்கள்