வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (08:10 IST)

மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகள் வாந்தி, மயக்கம்! – மருத்துவமனையில் அனுமதி!

School
டெல்லியில் அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஷாதாராவில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். நேற்று அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவுக்கு பிறகு சில மணி நேரங்களில் மாணவிகள் பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 9 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக மேற்கு வங்கத்தில் மதிய உணவில் பாம்பு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K