செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified ஞாயிறு, 22 ஜனவரி 2023 (16:24 IST)

துபாய்ல நம்ம இருந்த ரேஞ்சுக்கு..! லீலா பேலஸுக்கு அல்வா குடுத்த ஆசாமி!

Leela Palace
டெல்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அரபு மன்னரின் ஊழியர் என கூறி தங்கிவிட்டு ஆசாமி ஒருவர் காசு கொடுக்காமல் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சரோஜினி நகரில் புகழ்பெற்ற லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த ஓட்டலிற்கு வந்த ஒருவர் தான் துபாயிலிருந்து வருவதாகவும், அரபு அமீரக அரச குடும்பத்தின் ஊழியர் என்றும் கூறி அறை எடுத்து தங்கியுள்ளார்.

ஒரு ஆடம்பர அறையை எடுத்து 3 மாதங்களுக்கும் மேலாக தங்கிய அந்த நபர் கடைசியாக அறையை காலி செய்தபோது ரூ.23 லட்சம் பில் வந்துள்ளது. அந்த தொகைக்கு காசோலை எழுதி தந்துவிட்டு சென்றுள்ளார் அந்த நபர். ஆனால் அந்த காசோலையை வங்கியில் அளித்தபோது அது போலியான காசோலை என தெரிய வந்துள்ளது.

அதையடுத்து ஓட்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் முகமது ஷெரிப் என்ற் அந்த ஆசாமியை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் தக்சன கன்னடா பகுதியை சேர்ந்தவர் என்றும், அரபு அமீரக அரச ஊழியர் என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்றும் தெரிய வந்துள்ளது.

Edit By Prasanth.K