வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2023 (16:21 IST)

அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விரும்புகிறேன்: முதல்வர் அறிவிப்பு

Schools
அரசு பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விருப்பம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
 நாட்டில் சிறந்த பள்ளிகள் இருந்தால்தான் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவிற்கு வந்து கல்வி பயில வருவார்கள் என்றும் வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக சென்றிருந்த ஆசிரியர்கள் மத்தியில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 
 
டெல்லியில் உள்ள பள்ளிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்ல விரும்புகிறேன் என்றும் உலக அளவில் நமது பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக மாற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் டெல்லி அரசு கல்வித்துறையில் சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு டெல்லியில் பள்ளிகளின் நிலை மோசமாக இருந்தது என்றும் ஆனால் தற்போது சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என்றும் அரசு பள்ளி மாணவர்கள் எந்த ஒரு பயிற்சி வகுப்புக்கும் செல்லாமலேயே ஜேஇஇ போன்ற தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva