திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (13:15 IST)

சினிமா பாணியில் 15 பேரைக் கொன்ற பெண் : திடுக்கிடும் சம்பவம்...

கர்நாடக  மாநிலத்தில் உள்ள சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. சில தினங்களுக்கு இந்தக் கோவில் கோபுரத்தின் மீது கசலம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
இதை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்கதர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.
 
இதில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். 90 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுதும் பெரும்  அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. 
 
இதுகுறித்து போலீசார் அதிரடி விசாரணையை மேற்கொண்டனர். அபோது கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே உருவான மோதலில்தான் பக்தர்கள் சாப்பிடும் பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் கிடைத்தது.
 
இந்தம் சம்பவம் தொடர்பாக மாரம்மா அம்மன் கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவரது மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.  
 
இதனையடுத்து பிரசாத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது அம்பிகா என்ற பெண் என்பது இப்பொழுது வெளியாகி உள்ளது. மேலாளர் ராஜேஷ் என்பவரின் மனைவிதான் அம்பிகா என்றும்,அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
 
அதாவது கர்நாடகத்தைச் சேர்ந்த மதேஷை திருமணம் செய்தபிறகு அவர் அங்கு சென்று விட்டார். இந்தக் கோவிலில் பணியாற்றும் பூசாரிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பிரசாதத்தில்  பூச்சிக்கொல்லி மருந்து கலந்ததாக விசாரணையில் அம்பிகா தெரிவித்துள்ளார்.
 
கோவில் பிரசாரத்தில் விஷம் கலந்து 15 பேர் பலியான சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.