செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 டிசம்பர் 2018 (11:08 IST)

ஏமாற்றிய காதலன்: துவண்டுபோகாத காதலி: பிறந்தநாளன்று செய்த காரியம்!!!

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை காதலி பழிக்குப் பழி வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் டியானா. டியானா ஒரி இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். ஆனால் அந்த நபர் டியானாவை காதலித்த அதே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
 
இதனையறிந்த டியானா காதலனை பழி வாங்க திட்டமிட்டார். அதன்படி, கடந்த வாரம் டியானா தனது 21 வது பிறந்தநாளை தன் வீட்டில் நண்பர்கள் மற்றும் காதலனனோடு கொண்டாடினார். 
 
அப்போது சபையில் வைத்து தன் காதலன் தமக்கு செய்த துரோகத்தை கூறினார். இதனால் அவரது காதலன் முகம் சுருங்கியது. அதிரடியாக அவரை வீட்டிலிருந்து வெளியேற சொன்னார். அவமானத்தில் தலைகுனிந்த அந்த வாலிபர் எதுவும் பேசாமல் வெளியே சென்றார். ஏமாற்றுபவர்களை இப்படி தான் செய்ய வேண்டும் என டியானா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.