திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (10:09 IST)

மொபைல் சார்ஜரால் உயிரிழந்த பெண் ...அதிர்ச்சி சம்பவம்

தெலுங்கானா மாநிலம் வத்சபூர் மாவட்டத்தில் உள்ள வத்சர் பஞ்சாயத்துக்கு ஒன்றிய ஒரென்பர்க் பகுதியில் வருபவர் ராக்பாய். இவரது மகள் அர்ச்சனா (20 ) தன் தந்தையுடன் விவசாய வேலை செய்துவந்தார்.
அர்ச்சனாவும் அவரது தாயும் அருகில் உள்ள பள்ளியில்  சமையல் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதிய வேளையில் வீட்டுக்கு வந்தவர் சார்ஜ் போட்டிருந்த தன் மொபைல் போனை எடுக்கும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலினார்.
 
அர்ச்சனா அசைவற்று இருப்பதை பார்த்த அவரது தாய் பதறியடித்து கூச்ச்லிட்ட போது அக்கம் பக்கத்துல் உள்ளவர்கள் கூடிவிட்டனர். அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென்று ஏற்பட்ட பழுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 
அர்ச்சனாவின் உயிரிழப்பால் அப்பகுதியே சோகமாக காட்சியளிக்கிறது.
 
மொபைலுக்கு சார்ஜர் போடும் போதும் , மின்சாதனங்கள் கையாலும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.