வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (13:03 IST)

நாளை இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நியூஸிலாந்தின் வெல்லிங்டனில் தொடங்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் முன்னதாக 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் மோதின. இதில் டி20 போட்டிகளில் 5-0 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளது. நாளை நியூஸிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் முதல் டெஸ்ட் போட்டி அதிகாலை 4 மணிக்கு (இந்திய நேரம்) தொடங்கவுள்ளது.