வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (21:49 IST)

உலகிலேயே சுத்தமான பெட்ரோல் டீசலை வழங்கும் நாடு இந்தியா !

உலகிலேயே சுத்தமான பெட்ரோல் டீசலை வழங்கும் நாடு இந்தியா !

உலகிலேயே மிகவும் சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசலை வழங்கும் என்ற பெருமை கொண்ட நாடு என்ற பெருமை பெறவுள்ளது.
 
வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் பி.எஸ் 6 தரத்திலான (BS -vl )பெட்ரொல் டீசல் மட்டுமே விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.  
 
நாட்டில் சாலைகளில் செல்லு போக்குவரத்து வாகனங்கள் வெளியிடுவதால் ஏற்படும் புகையால்  முக்கியமான நகரங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் பிஎஸ் 6 எரிபொருள் விற்பனைக்கு வரவுள்ளது.
 
இதற்காக , இந்தியாவில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும்  95 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டன. இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்ததன்படி,  கடந்த ஆண்டு இறுதியில் பிஎஸ் 6 தர எரிபொருள் உற்பத்தி துவங்கிவிட்டது. 
 
அதேபோல் ஏற்கனவே டில்லியில் பிஎஸ்6 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.