செவ்வாய், 8 ஜூலை 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: சனி, 21 ஜூன் 2025 (09:34 IST)

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

Muruga Bhakthar Manaadu

மதுரையில் நாளை நடைபெற உள்ள முருகன் மாநாட்டில் கின்னஸ் சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நாளை பிரம்மாண்ட முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல மாநில அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், மதகுருக்கள், ஆதீனங்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

 

சிறப்பு விருந்தினர்களாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வரும், நடிகருமான பவண் கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களை ஈர்க்கும் வகையில் அறுபடை வீடுகளின் மாதிரிகள் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

 

மேலும் 1 லட்சம் பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்யவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K