திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (20:09 IST)

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் நாக்கை வெட்டுங்கள்: சர்ச்சை பேச்சால் பரபரப்பு

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் நாக்கை வெட்டுங்கள்
மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல பிரமுகர்கள் சர்ச்சை பேச்சுக்களை பேசி வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான சர்ச்சை பேச்சுகளை பாஜக மற்றும் அதன் ஆதரவு இயக்கங்களின் தலைவர்கள் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கதக் என்ற நகரில் சத்ரபதி சிவாஜியின் 393 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் செயல் தலைவர் சித்தலிங்கையா சுவாமிஜி என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
 
இந்த விழாவில் அவர் பேசியபோது ’இந்தியாவில் தயாராகும் உணவை சாப்பிட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய காஷ்மீர் மாணவர்கள் மூன்று பேர்களின் நாக்கை வெட்டி கொடுப்பவருக்கு மூன்று லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறினார்
 
மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களுடைய நாக்கை வெட்டுங்கள் என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்த சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது