40 ரன்களில் 3 விக்கெட்: முதல் டெஸ்ட்டில் திணறும் இந்தியா!

முதல் டெஸ்ட்டில் திணறும் இந்தியா
Last Modified வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (06:25 IST)
முதல் டெஸ்ட்டில் திணறும் இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இந்தியாவும், ஒருநாள் தொடரில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று வெலிங்டன் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கியது. பிபி ஷா மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிலையில் பிபி ஷா 16 ரன்களில் ஆட்டமிழந்தனர் இதனையடுத்து களமிறங்கிய புஜாரா 11 ரன்களிலும் விராட் கோலி 2 ரன்களிலும் ஆட்டம் இழந்ததால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது

இந்த நிலையில் தற்போது இந்திய அணி 28 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் என்ற நிலையில் உள்ளது. தற்போது மயங்க் அகர்வால் மற்றும் ரகானே விளையாடி வரும் நிலையில் இன்னும் விகாரி, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகிய பேட்ஸ்மேன்கள் விளையாடவுள்ளனர் என்பதும், ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் செளதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :