செல்ஃபி எடுக்கும்போது, கால்வாயில் விழுந்த பெண்! கயிற்றை கட்டி மேலே இழுத்த பொதுமக்கள்..!
செல்பி எடுக்கும் போது இளம் பெண் ஒருவர் கால் தடுக்கி கால்வாயில் விழுந்த நிலையில் அவரை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கயிறு கட்டி மேலே இழுத்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டம் நாகார்ஜுனா சாகர் இடது கால்வாய் அருகே உள்ள வெல்லப்பள்ளி பாலத்தின் மீது இளம்பெண் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். விதவிதமாக அவர் செல்பி எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென கால் தவறி கால்வாயில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இளம் பெண் கால்வாயில் விழுந்ததை கவனித்த அந்த பகுதி மக்கள் உடனடியாக கால்வாயில் குதித்து அந்த பெண்ணை கயிற்றை கட்டி மேலே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் இளம் பெண்ணுக்கு சிறிய அளவில் மட்டும் காயம் இருந்ததாகவும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
செல்பி எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆபத்தான பகுதியில் செல்பி எடுக்கக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் ஆபத்தை உணராமல் இளம் வயதினர் செல்பி எடுப்பது பெரும் விபத்தில் முடிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva