புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (07:50 IST)

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞருக்கு கால் முறிந்தது..!

இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான இளைஞர் போலீஸிடம் இருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்து கால் முறிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கடந்த 12ஆம் தேதி 4 பேர் கொண்ட கும்பல் 22 வயது பட்டதாரி பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் இவர்களில் ஒருவர் 17 வயது சிறுவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கைதானவர்களில் ஒருவரான கவிதாசன் என்பவர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு கொண்டிருந்த போது திடீரென தப்ப முயன்றதாகவும் அப்போது போலீசார் அவரை பிடிக்கும் போது கீழே விழுந்ததால் அவரது கால் எலும்பு முறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவருக்கு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Editted by Siva