திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (11:28 IST)

இன்ஸ்டாகிராமில் காதல்.. நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட விபரீதம்.. 2 பேர் கைது..!

உடுப்பி மாவட்டம் கார்காலாவை சேர்ந்த இளம் பெண்ணும், அல்தாப் என்பவரும் இரண்டு மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகியுள்ள நிலையில்  இருவரும் நேரில் சந்தித்து கொள்ளலாம் என முடிவெடுத்து, கார்காலாவில் சந்தித்த போது ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் ஏற்பட்ட காதல் காரணமாக இளம் பெண்ணை அவரது காதலன் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து மதுபானத்தில் போதை பொருள் கலக்கப்பட்டு இருந்ததால் அந்த இளம் பெண் மயக்கம் அடைந்து விட்டதாகவும் இதை அடுத்து அந்த பெண்ணை பாலியல் வன்முறைக்கு அல்தாப் உள்ளாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து வலது சாரி ஆர்வலர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் இளம் பெண் மருத்துவமனைக்கு அழைத்து செய்யப்பட்டார். இந்த நிலையில் அல்தாப் மற்றும் அவரது கூட்டாளி என இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Edited by Siva